அந்த தப்பு செய்ததால் செருப்பால் அடித்தேன் – வாழ்க்கை தொலைத்த நடிகை வேதனை!

Author: Rajesh
22 February 2024, 7:14 pm

தமிழ் சினிமாவில் மிகவும் போல்டான நடிகையாக ரசிகர்கள் மனத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். பிரபல நடிகை லக்ஷ்மியின் மகளான இவர் தனது கரகர குரலில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

சிவகுமார் நடிப்பில் 1990ம் ஆண்டில் வெளிவந்த நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்கிற படம்மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ராசுக்குட்டி படம் மூலம் தான் பிரபலமானார். அதன் பிறகு ரஜினியுடன் எஜமான், கமலுடன் பஞ்சதந்திரம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார் ஐஸ்வர்யா.

அதன் பின்னர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆறு படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் சவுண்டு சரோஜா என்கிற கேரக்டரில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார். அதன் பிறகு அபியும் நானும் படத்தில் திரிஷாவுக்கு அம்மாவாக அழகான ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அதன் பின்னர் சரியாக படவாய்ப்புகள் இல்லாததால் சோப்பு விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், இந்த தவறு செய்து வாழ்க்கையே மாறிவிட்டது என்றால் அது எந்த தவறு? என கேட்டதற்கு, ரோஜா படத்தில் ஹீரோயினாக நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த நேரத்தில் நான் தெலுங்கு படத்தில் நடித்ததால் வேண்டாம் என ஒதுக்கிவிட்டேன். பின்னர் தெலுங்கு பட ஷூட்டிங் நடக்கவே இல்லை. ரோஜா படம் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன் என எண்ணி என்னை நானே செருப்பால் அடித்துக்கொண்டேன் என ஐஸ்வர்யா அந்த பேட்டியில் கூறினார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!