உங்க கூட இதை பண்ணுவேன்னு நெனச்சி கூட பாக்கலை.. குருவுக்கே டீச்சர் ஆன தனுஷ்..!

Author: Vignesh
23 February 2024, 9:57 am

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மற்றும் வித்யாசமான கண்ணோட்டத்தில் படம் எடுப்பவர் இயக்குனர் செல்வராகவன். 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

dhanush selvaraghavan

அந்த படத்தில் தான் தனுஷையும் அறிமுகம் செய்து வைத்தார். தான் கடந்து வந்த இளமை கால உணர்வுகளை ரசிகர்களுக்கு ஏற்றவாறு அந்த படத்தில் காட்சிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார். அதன் பிறகு 2003ம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். இப்படத்திலும் தனுஷ் தான் ஹீரோ.

dhanush selvaraghavan

இந்நிலையில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. அந்த படத்தில், செல்வராகவனும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராயன் படத்தில் ஸ்கிரிப்ட் செல்வராகவன் தான் எழுதினார் என ஒரு செய்தி வெளியான நிலையில், செல்வராகவன் அதை மறுத்துள்ளார்.

dhanush selvaraghavan

மேலும், இது தனுஷின் அவரது கனவு ஸ்கிரிப்ட் படம் ஆக உருவாகியிருக்கிறது என விளக்கமும் கொடுத்திருந்தார். இந்த நிலையில், செல்வராகவன் ராயன் படத்தில் இருக்கும் போஸ்டரை தனுஷ் பதிவிட்டு உங்களை இயக்குவேன் என நினைக்கவில்லை சார் என பதிவிட்டு இருக்கிறார். அதற்கு செல்வராகவன் வாய்ப்புக்கு நன்றி சார் என தனுஷுக்கு பதில் போட்டு இருக்கிறார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 256

    0

    0