பாஜகவில் இணைந்தார் காங்., எம்எல்ஏ விஜயதாரணி : காலியாகும் காங்கிரஸ் கூடாரம்… அதிர்ச்சியில் I.N.D.I.A கூட்டணி!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2024, 2:16 pm

பாஜகவில் இணைந்தார் காங்., எம்எல்ஏ விஜயதாரணி : காலியாகும் காங்கிரஸ் கூடாரம்… அதிர்ச்சியில் I.N.D.I.A கூட்டணி

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பாஜக பக்கம் விஜயதாரணி தாவப் போகிறார் என தகவல்கள் வெளியாகி வந்தது.

இந்த நிலையில் விஜயதாரணி இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக 3 முறை போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானவர். 2011,2016 மற்றும் 2021 என மூன்று முறை எம்எல்ஏவாக உள்ளவர்.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தியான விஜயதாரணி பாஜகவில் இணைவார் என்ற செய்திகள் வெளியான போது காங்கிரஸ் கட்சி இதை மறுத்தது. அண்மையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வான செல்வப்பெருந்ததை இந்த தகவலை முற்றிலும் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்