காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதாரணி நீக்கம்.. காலியாகும் எம்எல்ஏ பதவி : மீண்டும் இடைத்தேர்தல்?!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2024, 4:21 pm

காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதாரணி நீக்கம்.. காலியாகும் எம்எல்ஏ பதவி : மீண்டும் இடைத்தேர்தல்?!

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பாஜக பக்கம் விஜயதாரணி தாவப் போகிறார் என தகவல்கள் வெளியாகி வந்தது.

இந்த நிலையில் விஜயதாரணி இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக 3 முறை போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானவர். 2011,2016 மற்றும் 2021 என மூன்று முறை எம்எல்ஏவாக உள்ளவர்.

இந்த நிலையில், விஜயதரணி பாஜகவில் ஐக்கியமானதை தொடர்ந்து, அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் உத்தரவிட்டார்.

ஏற்கனவே, தமிழக காங்கிரஸ் தலைமையும் விஜயதரணியை நீக்கம் செய்திருந்தது. மேலும், விஜயதரணியை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்படும் என்றும் அவரை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனிடையே, பாஜகவில் இணைந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அது தொடர்பான பதவிகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன் எனவும் அறிவித்திருந்தார்.

  • Kanguva movie OTT date announcement 100 கோடி கொடுத்த ஓடிடி..! தியேட்டருக்கு டாடா காட்டிய “கங்குவா”
  • Views: - 187

    0

    0