ஒரு இன்ச் கூட நகராமல் அப்படியே நிற்கும் விடாமுயற்சி… கல்லாலே காசு இல்லப்பா – கைவிரித்த தயாரிப்பாளர்!

Author: Rajesh
24 February 2024, 5:48 pm

தல அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகழ் திருமேனி இயக்கிவரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இப்படத்தின் ஷூட்டிங் இடைவெளி விட்டு இடைவெளி விட்டு நடைபெற்று வருகிறது. இந்த பிப்ரவரி மாதம் இறுதி வரை இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என தகவல் வெளியாகியது.

vidamuyarchi

ஆனால், இதுவரை இப்படத்தை குறித்த எந்த ஒரு அப்டேட்டும் பெரிதாக வராததால் அஜித் ரசிகர்கள் வேதனையில் இருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரையும் குஷி படுத்தும் வகையில் தற்ப்போது அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே 63 படத்தின் மாஸான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

ஆம், நடிகர் பிரபுவின் மருமகனான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் அவருடைய டீம் கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் முடிவில் அல்லது ஏப்ரல் மாதம் துவக்கத்தில் ஆரம்பம் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்காக அஜித் ரூ. 163 கோடி சம்பளம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை விடாமுயற்சி படத்தின் அப்டேட் எதுவும் வெளிவராததால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஒரு வேலை அஜித் சரியாக ஒத்துழைப்பு தராமல் இழுத்தடித்தடித்ததால் படப்பிடிப்பு தள்ளி செல்கிறதா என கேள்வி எழுப்பப்படும் நேரத்தில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து நிதி நெருக்கடி இருப்பது தான், படப்பிடிப்பு தாமதம் ஆவதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங்கிற்கு ஒரு நாளைக்கு தயாரிப்பு செலவு மட்டுமே ரூ. 50 லட்சம் ஆகிறதாம். இதனால் தயாரிப்பு நிறுவனத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வருகிறதாம். இதனால் அஜித் விடாமுயற்சி படத்தை அப்புறப்படுத்திவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் துவங்கவுள்ள படத்தில் கவனம் செலுத்த உள்ளாராம்

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 243

    0

    0