கேவலம் பணத்துக்காக இப்படி பண்ணலாமா? கிரணுக்கு கிளாஸ் எடுத்த ஷகிலா!

Author: Rajesh
24 February 2024, 7:50 pm

ஐட்டம் நடிகை, ஆபாச நடிகை என மிகவும் கொச்சையான நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டவர் நடிகை ஷகிலா. இவர் ஆபாச படங்களில் முகம் சுளிக்கும் அளவிற்கு நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். மோசமான படுக்கையறை காட்சிகள், கவர்ச்சி நடனம் என தமிழ் உள்ளிட்ட ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை இன்பமாக்கினார். இவர் தன் 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்னர் மலையாளம் , தமிழ் என பல்வேறு அடல்ட் திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அத்துடன் குடும்ப ரசிகைகளின் வெறுப்பையும் சம்பாத்தித்து வைத்தார். இருந்தாலும் 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார்.

அதன் பின்னர் இவரது அடையாளத்தையே மாற்றியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் மூலம் ஒரு புதிய அவதாரம் எடுத்த ஷகிலா தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை கிரண் ரதோட் கலந்துக்கொண்டார். அப்போது, அப்போது அவரின் பலான ஆப் குறித்து கேட்டதற்கு எக்குத்தப்பான பதிலை கூறினார். தொடர்ந்து 2016ம் ஆண்டில் வெளிவந்த இளமை ஊஞ்சல் என்ற படத்தில், ஏன் அவ்வளவு கவர்ச்சியாக நடிச்சே என கேட்டதற்கு, அந்த படத்தில் அப்படி நடிக்க நிறைய பணம் கொடுத்தாங்க. பணத்திற்காக நடித்தேன் என கூறினார் கிரண் ரதோட். அதற்கு ஷகிலா பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பியா? என கேள்வி கேட்டு கிளாஸ் எடுத்தார். இதனை கேட்ட நெட்டிசன்ஸ் நீங்க மட்டும் யோக்கியமா? உங்கள விடவா மோசமா நடிச்சிட்டாங்க என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 227

    0

    0