அன்னைக்கு ராத்திரி 12 மணிக்கு.. குடும்ப ரகசியத்தை உடைத்த வனிதா..!

Author: Vignesh
24 February 2024, 8:20 pm

நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் ஒரு கல்யாணம் வந்து மக்கள் மறந்து கிடந்த அத்தனை பிரச்சினைகளையும் மறுபடியும் நினைவுபடுத்த வைத்திருக்கிறது. அதாவது, ஒரு பக்கம் விஜயகுமார் பேத்தி தியாவின் கல்யாணம் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கும் அதே நிலையில், அதற்கு சரிசமமாக வனிதா பேசிய பேட்டிகளும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

vanitha

வனிதாவுக்கும் விஜயகுமாருக்கும் பிரச்சனை என்பது கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து கொண்டு இருக்கிறது. வனிதா இன்டர்வியூ கொடுக்க அவருடைய மொத்த குடும்பமும் அவரை ஒதுக்கி வைத்து விட்டது. வனிதா பிரிந்ததற்கு பிறகு நடந்த வீட்டின் முதல் நல்ல விஷயத்திற்கு கூட அவரை அழைக்காமல் ஒதுக்கி வைத்து விட்டார்கள். அவரை தவிர்த்து மற்ற எல்லோரும் கலந்து கொண்டு கோலாகலமாக அந்த திருமணம் நடைபெற்றது.

vanitha_updatenews360

வனிதா அவருடைய குடும்பத்தை பற்றி பேசிய வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், அவர் என்னுடைய அப்பா என் மீது மிகவும் பாசமாக இருப்பார். அவர் நல்லவர். ஆனால், வெளியே உள்ள சிலரின் பேச்சை கேட்டு அப்படி நடந்து கொள்கிறார். வெளியே இருந்து வந்தவர்கள் தான் எங்கள் குடும்பத்தை ஒன்று சேர விடாமல் தடுத்து வருகிறார்கள். ஒரு நாள் இரவு 12 மணிக்கு பார்ட்டி ஒன்றில் நானும் அருண் விஜய் அண்ணாவும் சந்தித்தோம். அப்போது, கூட எவ்வளவு நாட்களுக்கு இப்படி சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறது என கேட்டேன். அதற்க்கு அவர், இப்போது அதைப்பற்றி பேச வேண்டாம் என்ஜாய் நண்பர்களுடன் என்ஜாய் பண்ணு என்று சொல்லி அங்கிருந்து சென்று விட்டார். எங்கள் குடும்பத்தில் ரத்த சொந்தங்கள் எல்லோரும் நல்லவர்கள் தான் என்று வனிதா தெரிவித்துள்ளார்.

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 201

    0

    0