தனியார் விடுதியில் திடீரென பரவிய தீ… பாதி உடல் கருகிய நிலையில் அலறிய நபர் மீட்பு!!
Author: Udayachandran RadhaKrishnan24 February 2024, 7:59 pm
தனியார் விடுதியில் திடீரென பரவிய தீ… பாதி உடல் கருகிய நிலையில் அலறிய நபர் மீட்பு!!
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுராஜக்காபட்டி பகுதியில் வாழ்க வளமுடன் என்ற தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது இந்த விடுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாக்காக வருவோர் இந்த விடுதியில் அறை எடுத்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில் இன்று கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் வயது 47 என்பவர் திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் பணியாற்று வருகிறார் இவர் வாழ்க வளமுடன் தங்கும் விடுதியில் அறை எடுத்து பணிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் ராமநாதன் தங்கி இருந்த விடுதி அறையில் இருந்து வந்த புகையை அடுத்து விடுதி காப்பாளர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் பொன்னம்பலம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இவர் தற்கொலை முயற்சி செய்தாரா அல்லது மின் கசிவு எதுவும் ஏற்பட்டதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்