மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை… பாஜக வெற்றி பெறும்… காரணம் இதுதான் : சீமான் பரபரப்பு பேச்சு!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2024, 5:23 pm

மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை… பாஜக வெற்றி பெறும்… காரணம் இதுதான் : சீமான் பரபரப்பு பேச்சு!!!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறோம். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதை செய்கிறோம் என்று தெரிவித்தார்.

தனித்தொகுதி என்பது இல்லை என்றால் இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பே இருக்காது. எனவே அரசியல் அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவருக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!