மேகா ஆகாஷின் அம்மாவும் ஹீரோயின் மாதிரி இருக்காங்க.. வைரல் புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்..!

Author: Vignesh
26 February 2024, 6:45 pm

சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார்.

megha akash - updatenews360.jpg d

எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர் வட்டம் உருவானது. ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு பின் இவர் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி விட்டது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களின் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த இவர், சிம்புவுடன் நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் படு தோல்வியை தவழுவியது.

megha akash - updatenews360.jpg d

இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம்.

megha akash - updatenews360.jpg d

இதனால், முன்னணி நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு குறி வைத்த மேகா ஆகாஷ் பொருத்து பொருத்து பார்த்து, போதும்டா சாமி என தற்போது, அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது மேகா ஆகாஷ் அவரது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, மேகாவின் அம்மா ஹீரோயின் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

megha akash
  • Rana Daggubati police investigation நடிகர் ராணா மீது திடீர் வழக்கு….துருவி துருவி விசாரணையில் ஈடுபடும் போலீசார்..!
  • Copyright © 2024 Updatenews360
    Close menu