படியில் தொங்கியபடி ஆபத்தான தித்…திக்… பயணம்… அலட்சியமாக பேருந்தை இயக்கும் ஓட்டுநர்… அதிர்ச்சி வீடியோ!!
Author: Babu Lakshmanan26 February 2024, 9:44 pm
பொள்ளாச்சி கோவை சாலையில் தனியார் பேருந்தில் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து கோவை பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் தினந்தோறும் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். இன்று காலை பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட கலைமகள் என்ற தனியார் பேருந்தில் கோவையில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.
இந்த பேருந்துக்கு பின்னால் காரில் வந்த நபர், மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கி செல்வதை மொபைல் போனில் படம் பிடித்தபடி, பேருந்து ஓட்டுனரிடம் கேட்டபோது, அவர் பேருந்தை நிறுத்தாமல் மீண்டும் அதிவேகத்துடன் சென்றார்.
காட்சிகளை பதிவு செய்த நபர் கூறுகையில், “பொள்ளாச்சி – கோவை சாலையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு அதிக அளவில் பயணிகளை ஏற்றுக்கொண்டு வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பொறுப்புணர்வு இல்லாமல் இதுபோன்ற தனியார் பேருந்துகள் மாணவர்களை படியில் தொங்கியபடி அழைத்து செல்வது மிகவும் ஆபத்தான ஒரு செயல்.
நாள்தோறும் விபத்துகளை அதிகளவில் சந்திக்கிறோம் பெற்றோர்களுக்கு யார் பதில் சொல்வது எனவே உடனடியாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்துனர்.