அவங்களால்தான் இப்படி மாறினேன்.. அருண் விஜய் அம்மா எப்படிபட்டவங்க தெரியுமா? வனிதா OPENTALK..!

Author: Vignesh
27 February 2024, 2:49 pm

நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் ஒரு கல்யாணம் வந்து மக்கள் மறந்து கிடந்த அத்தனை பிரச்சினைகளையும் மறுபடியும் நினைவுபடுத்த வைத்திருக்கிறது. அதாவது, ஒரு பக்கம் விஜயகுமார் பேத்தி தியாவின் கல்யாணம் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கும் அதே நிலையில், அதற்கு சரிசமமாக வனிதா பேசிய பேட்டிகளும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

vanitha

வனிதாவுக்கும் விஜயகுமாருக்கும் பிரச்சனை என்பது கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து கொண்டு இருக்கிறது. வனிதா இன்டர்வியூ கொடுக்க அவருடைய மொத்த குடும்பமும் அவரை ஒதுக்கி வைத்து விட்டது. வனிதா பிரிந்ததற்கு பிறகு நடந்த வீட்டின் முதல் நல்ல விஷயத்திற்கு கூட அவரை அழைக்காமல் ஒதுக்கி வைத்து விட்டார்கள். அவரை தவிர்த்து மற்ற எல்லோரும் கலந்து கொண்டு கோலாகலமாக அந்த திருமணம் நடைபெற்றது.

vanitha_updatenews360

வனிதா அவருடைய குடும்பத்தை பற்றி பேசிய வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், தனக்கு சமையல் ஆர்வம் வந்தது குறித்தும் கற்றுக் கொண்டது எப்படி என பேசி உள்ளார். அதாவது, வனிதாவின் அம்மா மஞ்சுளா எப்போதாவது தான் சமைப்பாராம். அவர் அந்த நேரத்தில், பிஸியாக இருந்ததால், இவர்களுக்கு விதவிதமாக சமைத்துக் கொடுத்தது அருண் விஜயின் அம்மாவான முத்துக்கண்ணுதான் என்று கூறியுள்ளார்.

vijakumar

மேலும், பெரியம்மா நல்லா சமைப்பாங்க அவங்களோட சமையல் அருமையா இருக்கும். எனக்கு அவங்க சமையல் பார்த்து தான் சமைக்க வேண்டும் என்ற ஆர்வமே வந்தது. அதற்கு பின்னர் எனக்கு கொஞ்சம் விவரம் தெரிஞ்சு நானும் சமைக்க ஆரம்பித்தேன். ஆனாலும், அவங்க சாப்பாடு அருமையாக இருக்கும். எங்க அம்மா எப்பவாவது, ஒருமுறை சில சாப்பாடுகளை செஞ்சு கொடுப்பாங்க அவ்வளவு தான் என வனிதா பேசியுள்ளார்.

  • Keerthy Suresh Take Language class for Varun Dhawan வருண் தவானுக்கு லவ் சொல்ல கற்றுக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ!
  • Views: - 210

    0

    0