காவலர் மீது ரவுடிகள் மீது கொடூர தாக்குதல்..தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : இபிஎஸ் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2024, 9:39 pm

காவலர் மீது ரவுடிகள் மீது கொடூர தாக்குதல்..தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : இபிஎஸ் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள X பதிவில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா காவல்நிலைய உதவிஆய்வாளர் திரு.நாராயணசாமி அவர்களை ரவுடிகள் இருவர் இரும்புக்கம்பிகளால் தாக்கி கொடூரதாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த விடியா ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது, சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்ற நிலைக்கு தமிழ்நாடு தள்ளபட்டு இருப்பதற்கு விடியா அரசுக்கு என் கடும் கண்டனங்கள்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதற்கு போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதே ஆணிவேர், அதை திமுகவினரே செய்துவருகின்றனர் என்பது இன்னும் வேதனைக்குரியது.

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறி, காவல்துறையின் கைகளை கட்டி தமிழ்நாட்டை ரவுடிகள் ராஜ்ஜியமாக மாற்றி இருக்கும் இந்த கையாலாகாத அரசினை மக்கள் பேராதரவுடன் விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம்!

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?