மாவட்ட ஆட்சியர்களை ஆஜராகணும்.. தமிழக அரசு தாக்கல் செய்த மனு விநோதமா இருக்கு : உச்சநீதிமன்றம் வைத்த குட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2024, 9:51 pm

மாவட்ட ஆட்சியர்களை ஆஜராகணும்.. தமிழக அரசு தாக்கல் செய்த மனு விநோதமா இருக்கு : உச்சநீதிமன்றம் வைத்த குட்டு!

10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இந்த சம்மனை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகினர்.

மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் ஐந்து பேரும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தமிழக அரசு தாக்கல் செய்த மனு வினோதமானது என்றும் சாடியுள்ளது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 200

    0

    0