இயக்குனருடன் ஏற்பட்ட மோதல்.. விஜய்க்கு எதிராக கட்டம் கட்டி பத்தே நாளில் தூக்கி எறிந்த பிரபலம்..!

Author: Vignesh
28 February 2024, 11:13 am

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் .இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். ஆம், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Vijay - Updatenews360

விஜயின் திரை வாழ்க்கையில் முதல் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தேடிக் கொடுத்த திரைப்படம் என்றால், அது பூவே உனக்காக திரைப்படம் தான் இப்படத்தை பிரபல இயக்குனர் விக்ரமன் இயக்கி இருந்தார். இப்படத்தின், வெற்றியை தொடர்ந்து விக்ரமன் மற்றும் விஜய் இரண்டாவது முறையாக உன்னை நினைத்து படத்திற்காக இணைந்தனர்.

Vijay - Updatenews360

இதை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் வெளிவந்த உன்னை நினைத்து திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடித்து வந்தது விஜய் தான் என்று பலரும் அறிந்திடாத விஷயம். சில காட்சிகள் கூட விஜயை, வைத்து இயக்குனர் படமாக்கி விட்டார். ஆனால், திடீரென்று விஜய்க்கும் இயக்குனர் விக்ரமனுக்கும் இடையே, ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகள் காரணமாக விஜய்க்கு பதிலாக சூர்யாவை கதாநாயகனாக நடிக்க வைத்து உன்னை நினைத்து திரைப்படத்தை இயக்குனர் விக்ரமன் எடுத்து முடித்தார். இந்த தகவலை, பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தற்போது பகிர்ந்து கொண்டு உள்ளார்.

suriya - updatenews360
  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 204

    0

    0