ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றுகள் இன்று முதல் SPEED POSTல் மட்டுமே அனுப்பப்படும் : வெளியான முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2024, 8:14 pm

ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றுகள் இன்று முதல் SPEED POSTல் மட்டுமே அனுப்பப்படும் : வெளியான முக்கிய அறிவிப்பு!

பிப்ரவரி 28 முதல் ஓட்டுநர் உரிமங்கள், பதிவுச்சான்றுகள் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும். எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,வாகன், சாரதி மென்பொருளில் அலைபேசி எண், முகவரி தவறாக தெரிவித்திருந்தாலும் விரைவு அஞ்சலில் அனுப்பப்படாது. ஓட்டுநர் உரிமம் தபாலில் டெலிவரி செய்யப்படாமல் திரும்ப பெறப்பட்டாலும் நேரில் ஒப்படைக்கப்பட மாட்டாது.

விண்ணப்பதாரரிடமிருந்து உரிய ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் பெறப்பட்டு அதில் தான் அனுப்பப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

மேலும், ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி முகவரியை குறிப்பிட்டிருந்தால் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Good Bad Ugly Movie Utter Waste Said Celebrity வெறும் ரீல்ஸ் தான் இந்த படமே.. 20 நிமிஷத்துக்கு மேல பாக்க முடியல : GBU படத்தை விமர்சித்த பிரபலம்!