பஸ் ஸ்டாண்டில் வைத்து 2 பேருக்கு கத்தி குத்து.. பின்னணியில் மருமகளின் சாவு… அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
29 February 2024, 7:48 pm

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஸ் நிலையத்தில் 2 பேரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே வேலம்பட்டியைச் சேர்ந்தவர் ஆசை விவசாயி. இவர் நத்தம் பஸ் நிலையத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் ஆசையை கத்தியால் குத்தியதில் மூக்கு, மார்பு, கையில் குத்தியுள்ளனர். இதை தடுக்க வந்த இடையபட்டியைச் சேர்ந்த ஆண்டிச்சாமிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. குத்திவிட்டு அந்த நபர்கள் தப்பிவிட்டனர்.

உடன் காயம்பட்டவர்களை அருகிலிருந்தவர்கள் நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கத்திக்குத்து சம்பவத்திற்கு கடந்த வருடம் ஆசையின் மருமகள் இறப்பு காரணமாக மருமகள் குடும்பத்தினருக்கும் ஆசையின் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்குப் பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்து வருகிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 274

    0

    0