சின்ன தப்பு நடந்திடுச்சு.. மற்றபடி எங்களுக்கும் தேசப்பற்று அதிகம் தான் ; அண்ணாமலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில்..!!

Author: Babu Lakshmanan
29 February 2024, 8:05 pm

விளம்பர நாளிதழில் சீன அடையாள கொடியுடன் அச்சிடப்பட்டு சிறு தவறு நடந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைவது தொடர்பாக எங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில் சீன அடையாள கொடியுடன் அச்சிடப்பட்டு சிறு தவறு நடந்துவிட்டது. தெரியாமல் நடந்த தவறு.

அதில் எந்த நோக்கமும் இல்லை. எங்களுக்கு இந்தியாவின் மீது அதிக பற்று இருக்கிறது. ஒரு அரசு விழாவில் திட்டத்தையும் பயனையும், புதிய திட்டங்களையும், தொடங்க இருக்கும் திட்டங்களையும் பற்றி பேசவார்களே தவிர, அரசியல் பிரச்சாரம் பேச மாட்டார்கள். நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் அப்படி அரசியல் பேசியது, நமது நாட்டின் பிரதமர் என்பது என நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது, அடிப்படை தெரியாமல் இருக்கின்றனர்.

மேலும், திமுக தனித்து நின்ற டெபாசிட் வாங்க மாட்டார்கள் என்ற அண்ணாமலை கேள்விக்கு, எங்களது எம்பி கனிமொழி மற்றும் பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் பதில் கூறியுள்ளார்கள். வரும் பாராளுமன்ற தேர்தலில்
இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது, என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 325

    0

    1