திடீரென கெட்ட வார்தையில் பேசிய திமுக பெண் நிர்வாகி… திமுக திண்ணைப் பிரச்சாரத்தில் சலசலப்பு… முகம் சுழித்த பொதுமக்கள்..!!

Author: Babu Lakshmanan
1 March 2024, 9:00 am

திருவள்ளூர் அருகே திமுக திண்ணைப் பிரச்சாரத்தின் போது, திமுக மகளிர் அணி மாநில பிரச்சாரக் குழுச் செயலாளர் சேலம் சுஜாதா திடீரென கெட்ட வார்த்தையில் பேசியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வல்லூர் பட்ட மந்திரி நந்தியம்பாக்கம் மேட்டுப்பாளையம் ஊராட்சிகளில் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் திமுக அரசின் மூன்று ஆண்டுகள் சாதனைகளை துண்டு பிரசுரங்களாக வழங்கி திமுக கழக பேச்சாளரும், மகளிர் அணி மாநில பிரச்சார குழு செயலாளர் சேலம் சுஜாதா திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்த அவர், கணவன்கள் மனைவியை கெட்ட வார்த்தையில் திட்டுவார்கள் என திடீரென கெட்ட வார்த்தையில் பேசி கூடியிருந்த பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என விமர்சித்த அவர், நேற்றைய மழையில் முளைத்த காளான் அண்ணாமலை, போலீஸ்காரர் மாதிரியே எல்லோரையும் மிரட்டி வருவதாகக் கூறினார். தொடர்ந்து பாரதப் பிரதமர் மோடியையும் அவர் விமர்சித்தார்.

இதில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம் எஸ்கே ரமேஷ் ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?