கனிமொழி தொகுதியிலும் ‘கண்டா வரச்சொல்லுங்க’… திமுக எம்பியை காணவில்லை என போஸ்டர்… தூத்துக்குடியில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
1 March 2024, 4:41 pm

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்களித்த மக்களை கண்டுகொள்ளாத விடியா திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை காணவில்லை என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ம்ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விடியா திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த வெற்றிபெற்றவர்கள் அனைவரும் தமிழகம் நலன் சார்ந்த எந்த ஒரு பிரச்சனைக்கும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காமல் அமைதி காத்து வருவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் வெற்றி பெற்ற எம்.பி தங்கள் பகுதிக்கு வரவில்லை எனவும், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் எங்கள் பகுதி நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை எனவும், அவர்களை கண்டால் வர சொல்லுங்க என தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி முழுவதும் விடியா திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை கண்டால் வர என சுவரொட்டிகள் ஒட்டபட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடியில் கடந்த ஐந்து ஆண்டுகாலத்தில் எந்த ஒரு புதிய திட்டங்களும் தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு பெற்று தரவில்லை எனவும், கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழைக்கு எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் மக்கள் பெரிதளவு பாதிக்கமட்டு பொருட்சேதம், உயிர் சேதம் ஏற்பட்டு இன்றளவும் சிரமப்படுவதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 292

    0

    0

    Copyright © 2024 Updatenews360
    Close menu