தருமபுரி திமுக எம்பிக்கு எதிராக போஸ்டர்.. கண்டா வரச் சொல்லுங்க என ஒட்டியதால் மீண்டும் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2024, 8:15 pm

தருமபுரி திமுக எம்பிக்கு எதிராக போஸ்டர்.. கண்டா வரச் சொல்லுங்க என ஒட்டியதால் மீண்டும் பரபரப்பு!!

தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், மேட்டூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நகர பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்மபுரி எம்பி செந்தில்குமார் காணவில்லை என தெரிவித்து வால் போஸ்டர்கள் மர்ம நபர்களால் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த வால்போஸ்டரில் கண்டா வர சொல்லுங்க என்ற தலைப்பில், எங்கள் தொகுதி எம்பி-யை எங்கேயும் காணவில்லை இப்படிக்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

குறிப்பாக தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கண்டா வரச் சொல்லுங்க என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாக்காளர் பெருமக்கள் பலர் பலவிதமாக பேசும் ஒரு பேசும் பொருளாக மாறி உள்ளன.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி