ரூ.48 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.800 அதிகரிப்பு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
2 March 2024, 10:32 am

ரூ.48 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.800 அதிகரிப்பு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

மார்ச் மாத தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. இந்த நிலையில், 2வது நாளாக இன்றும் அதிரடியாக ரூ.800 உயர்ந்தது.

சென்னையில் இன்று (மார்ச் 2) 18 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ. 5,940 ஆகவும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து 47,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6410க்கும், சவரன் 51,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 77,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 5076

    0

    0