சினிமாவில் அறிமுகமாகும் தனுஷ் மகன்… முதல் படமே யார் இயக்கத்தில் நடிக்கிறார் தெரியுமா?
Author: Vignesh2 March 2024, 3:16 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிகராக மட்டுமே இயக்குனராகவும், தன்னை நிரூபித்து வருகிறார். அந்த வகையில், இவர் இயக்கத்தில் வெளிவந்த பா பாண்டி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின்னர், தற்போது தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்திப் கிஷான், காளிதாஸ், ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்க உள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். சமீபத்தில், தான் இப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது.
ராயன் படத்தில், தனுஷ் தனது மூத்த மகன் யாத்திராவை அறிமுகம் செய்யப் போகிறாராம். தனது தாத்தா, தந்தை, அம்மாவை போலவே யாத்ராவும் சினிமாவில் களமிறங்க போகிறார் எனக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்னும் திரைப்படத்தையும், இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.