கூண்டோடு பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்… சைலண்டாக காய் நகர்த்திய வினோஜ் பி செல்வம்..!!

Author: Babu Lakshmanan
2 March 2024, 4:31 pm

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் இன்னும் எதிர்கட்சிகளின் கூட்டணி அமையவில்லை. குறிப்பாக, தேமுதிக, பாமகவினர் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யாவிட்டாலும், அரசியல் பிரபலங்களின் கட்சி தாவல்கள் ஜரூராக நடந்து வருகிறது. அதிமுக, திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதேபோல, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ விஜயதாரணி டெல்லி சென்று பாஜகவில் இணைந்தார்.

இதேபோன்று, பாஜகவில் இணைபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. முக்கிய பாஜக தலைவர்கள், மாற்றுக் கட்சியினரிடம் பேசி, அவர்களை பாஜகவில் இணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளையில், தேமுதிக, பாமக தங்கள் கூட்டணிக்கு இழுக்க அதிமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, தேமுதிக, பாமகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜக பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்தின் மறைவுக்கு பாஜகவின் சார்பில் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் நேரில் சென்று பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், பாஜகவின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும், பாஜகவை வலுப்படுத்தும் பணிகளையும் அவர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிமுகவின் 54வது வட்டக்கழகச் செயலாளரும், துறைமுக பகுதி IT WING பகுதி கழக செயலாளருமான லோகேஷ், துறைமுக பகுதி அதிமுக மாணவரணி இணைச்செயலாளர் விஜய் அசோகம், அதிமுக கழக செயல் வீரர்கள் வரூண், சீனு, 54வது வட்டக்கழக நிர்வாகி வஜ்ஜிரவேலு, அதிமுகவின் துறைமுக பகுதி எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் அன்பழகன், இளைஞரணி செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் தங்களை பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அதேபோல, துறைமுகம் பகுதியைச் சேர்ந்த தேமுதிகவைச் சேர்ந்த இளைஞரணி துணைச் செயலாளர் விமல்ராஜ், கேப்டன் மன்ற துணைச் செயலாளர் மோகன், கேப்டன் மன்ற பகுதிச் செயலாளர் விக்னேஷ், தேமுதிக தொழிற்சங்க நிர்வாகிகளான சதீஷ், ஆறுமுகம், ராஜேந்திரன், சந்திரசேகர் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைவது தொடரும் என்று ஏற்கனவே அண்ணாமலை கூறியிருந்த நிலையில், துறைமுக தொகுதி பொறுப்பாளர் வினோஜ் பி செல்வம் முன்னிலையில், அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் கூண்டோடு பாஜகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மார்ச் 4ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகையின் போது, மாற்று கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 341

    0

    0