தமிழகத்தில் பாஜக நிராகரிக்கப்பட வேண்டிய கட்சி.. விதி மீறி ஒரு விமான நிலையத்துக்கு சர்வதேச அங்கீகாரம்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2024, 8:03 pm

தமிழகத்தில் பாஜக நிராகரிக்கப்பட வேண்டிய கட்சி.. விதி மீறி ஒரு விமான நிலையத்துக்கு சர்வதேச அங்கீகாரம்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

புதுக்கோட்டை மாவட்டம் மழவராயன்பட்டியில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஆறுலட்சம் ரூபாய் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டது சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், பாஜக கூட்டணி வைக்காத மாநிலங்களில் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்

வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே அறிவிப்பதால் அவர்கள் முந்தி செல்வதாக அர்த்தம் கிடையாது
ஹால் டிக்கெட் முன்பே கொடுத்து விட்டதால் அவர்கள் தேர்வு எழுத முடியாது தேர்வு நேரத்தில் மட்டும்தான்
ஹால் டிக்கெட் பயன்படுத்தி தேர்வு எழுத முடியும்

திமுக கூட்டணி புல் எந்தவிதமான குழப்பமும் கிடையாது தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது
விரைவில் சமூக தீர்வு ஏற்படும்.

திமுக காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதிமுக அழைப்பு விடுத்தாலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது

அதிமுக தங்களுடைய கட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று என்னுடைய விருப்பம்.பிரதமர் மோடி தமிழகத்திற்கு எவ்வளவு முறை வந்தாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது

பிஜேபி தமிழகத்தைப் பொறுத்தவரை நிராகரிக்கப்பட வேண்டிய கட்சி. காங்கிரஸ் கட்சி இருந்த போது சராசரி பொருளின் விலை என்ன என்பதையும் தற்போது சராசரி பொருளின் விலை என்ன என்பதையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

அனைத்து பொருட்களையும் தற்போது கூடிவிட்டது. பல்லடம் மற்றும் நெல்லை பாஜக பொதுக்கூட்டத்திற்கு வந்தது தமிழகத்தை சேர்ந்தவர்களா என்பதை சந்தேகமாக உள்ளது இங்குள்ள வாக்காளர்கள் தானா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளத

அதானி குடும்ப திருமணத்திற்கு ஒரு விமான நிலையத்தையே தற்காலிகமாக சர்வதேச விமான நிலையமாக விதிமுறை மீறி இந்த அரசு மாற்றி உள்ளது இதிலிருந்து அவர்கள் எந்த நோக்கத்தில் யாருக்காக செயல்படுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது.

நாங்கள் பலமுறை மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தோம் அதற்கு வணிகரீதியாக தற்போது சாத்தியமில்லை என்று பதில் கூறினர்

தற்போது அவர்கள் எடுத்திருக்கும் முடிவிலிருந்து அவர்கள் யாரை சார்ந்து உள்ளனர் என்பது தெளிவாக தெரிய உள்ளது
பாஜக 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறுவது ஆசை மட்டும் அல்ல பேராசையாகும்

இந்தி பேசாத மாநிலங்களில் பாஜக வளர்ச்சி அடையவில்லை இந்தி பேசும் மாநிலங்களில் இந்துத்துவா கொள்கையால் அவர்களுக்கு செல்வாக்கு உள்ளது

ஒவ்வொரு கட்சியும் யார் வேட்பாளர் என்பதை அவர்கள் முடிவு செய்கின்றனர். கட்சிக்குள் ஒருவருக்கு சீட்டு வேண்டும் ஒருவருக்கு சீட்டு கொடுக்கக் கூடாது என்பது கூறுவது வாடிக்கையான ஒன்று

போதை பொருள் புழக்கம் மற்றும் விற்பனை என்பது தமிழகத்தை குறி வைத்து மட்டும் கூறக்கூடாது போதை பொருள் விற்பனை மற்றும் இறக்குமதி என்பது இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது அதை கட்டுப்படுத்தவேண்டும்…

பாஜகவிற்கு வாக்கு சதவீதம் எவ்வளவு என்பதை மே மாதம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் தெரிந்துவிடும் எதற்காக இவ்வளவு அவசரப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் தங்களுடைய கடமையை செய்கிறார்களா இல்லையா என்பதை பார்க்க வேண்டுமே தவிர அவர்கள் எல்லா தெருவுக்கு வந்தனரா எல்லா வீதிக்கு வந்தனரா என்று பார்ப்பது சிரமமான காரியம்

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 269

    0

    0