ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்.. வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்த உள்துறை!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2024, 11:37 am

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்.. வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்த உள்துறை!

பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் மர்மபொருள் வெடித்து விபத்தானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,. அதை விட இது வெடிகுண்டு விபத்துதான் என முதலமைச்சர் சித்தராமையா கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் இது குறித்து விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர், இதை அரசியலாக பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார் .

இந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது, ஓட்டலுக்கு வந்த மர்மநபர் ஒருவர் வைத்து சென்ற பையில் வெடிகுண்டு வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெடி விபத்தில் காயமடைந்த 8 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பெங்களூருவின் எச்ஏஎல் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. என்ஐஏவிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதால் வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளி யார் என்பது விரைவில் கண்டறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…