உதயநிதி அறக்கட்டளைக்கு ஜாபர் சாதிக் நிதி கொடுத்துள்ளார்.. இல்லையென கூற முடியயுமா? சி.வி.சண்முகம் சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2024, 1:59 pm

உதயநிதி அறக்கட்டளைக்கு ஜாபர் சாதிக் நிதி கொடுத்துள்ளார்.. இல்லையென கூற முடியயுமா? சி.வி.சண்முகம் சவால்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் தமிழகத்தில் திமுக பொறுப்பேற்றதிலிருந்து சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், போதை பொருள் கடத்தலை தடுக்க தவறிவிட்ட திமுக தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தமிழகம் தகவல் தொழில் நுட்பம், பொருளாதாரத்தில் முன்னேறுகிறதோ இல்ல போதையில் கடத்தலில் முன்னேறுவதாகவும் சுகாதார துறை அமைச்சர் ஆய்வு மேற்கொள்ளாமல் அரை டவுசரை போட்டு கொண்டு ஓடி கொண்டு இருப்பதாகவும் தமிழகத்தில் தங்கு தடையின்றி போதை மாத்திரைகள் போதை ஸ்டாம்புகள் கிடைப்பதாக குற்றஞ்சாட்டினார்.

இஸ்லாம் சமூகத்தை சார்ந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சாதிக் பாஷா உயிரிழந்தபோது அவரது உடலை அடக்கம் செய்யாமல் எரியூட்டப்பட்டு உள்ளதாகவும், அதே போல் ஜாபர் சாதிக் உயிரோடு கைது செய்யப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு போதை பொருட்களை தடுப்பதற்கு தவறி இருப்பதாகவும் தவறு செய்தவர்களே திமுக கட்சியில் தான் இருப்பதாகவும் தவறு செய்தது முதலமைச்சராகவும், அமைச்சாரக இருந்தாலும் ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்தவர்கள் முழுமையான விசாரனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார்.

தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் சைக்கிளை எடுத்து கொண்டு ஊர் சுற்றியதாக தெரிவித்தார்.

திமுகவை சார்ந்த முக்கியமான மாவட்ட பொறுப்பிலிருந்த ஜாபர் சாதிக் 3500 கிலோ போதை பொருள் வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளார். அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை இதற்கு தமிழக அரசு மட்டும் பொறுப்பல டெல்லியில் ஆளும் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

பாஜக கட்டுப்பாட்டில் உள்ள அரசும் , தமிழக அரசு இதனை கண்டுபிடிக்கவில்லை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அரசு தகவல் கொடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்,
ஜாபர் சாதிக்கும் உதயநிதி, அவரது மனைவி கிருத்திக்காவிற்கு தொடர்பு இருந்திருக்கிறது. உதயநிதியின் அறக்கட்டளைக்கு ஜாபர் சாதிக் நிதி அளித்துள்ளார் இல்லை என்று கூறமுடியுமா, என கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரியர் நிறுவனத்தை வீடியோ எடுக்க சென்ற செய்தியாளர், ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டுள்ளார்கள். ஜாபர் சாதிக்குடன் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்தவர்கள் குறித்து முழுமையாக விசாரனை செய்ய வேண்டுமெனவும்,மத்திய புலனாய்வு துறை போதை பொருள் கடத்தலில் தமிழக காவல் துறையை நம்ப வேண்டாம் என்றும் போதை கடத்தல் குறித்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கூட்டணி தர்மத்துக்காக வாய் பேசாமல் உள்ளதாகவும் இவர்களின் இரட்டை வேஷத்தை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், தவறுக்கு குரல் கொடுக்காத கூட்டணி கட்சிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

சீரழிந்து, நிர்வாகம் இல்லாத, போதையின் பிடியிலிருந்து தமிழகத்தை காக்கப்பட வேண்டுமென்றால் குற்றவாளிகளின் கூடாரமாக உள்ள ஸ்டாலின் அரசு தூக்கி எறிய பட வேண்டும் என்று சிவி சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 339

    0

    0