செந்தில்பாலாஜியை பழிவாங்கும் எண்ணம் எல்லாம் இல்லை.. ஜாமீன் கொடுக்கக்கூடாது : அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2024, 5:06 pm

செந்தில்பாலாஜியை பழிவாங்கும் எண்ணம் எல்லாம் இல்லை.. ஜாமீன் கொடுக்கக்கூடாது : அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி!!

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, அண்மையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, சகோதரர் அசோக் குமார் தலைமறைவாக இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதியவில்லை.

வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவே செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி எந்தப்பக்கம் போனாலும் அமலாக்கத்துறை செக் வைக்கிறது. ஜாமீன் கிடைப்பதில் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வரும் அமலாக்கத்துறை, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவையும் தள்ளுபடி செய்யக்கோரியுள்ளது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 217

    0

    0