தமிழகத்தில் பிள்ளைகளை பிடிக்கும் வேலையில் பாஜகவினர்…. நத்தம் விஸ்வநாதன் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
4 March 2024, 9:34 pm

தமிழகத்தில் பிள்ளைகளை பிடிக்கும் வேலையை பாஜகவினர் செய்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு எதிராக திண்டுக்கல் மணிக்கூண்டில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில் :- பிஜேபி தமிழகத்தில் காலாவதியான ஓய்வு பெற்ற ஓய்வு பெற்ற அரசியல்வாதிகள் எங்கே இருக்கிறார்கள் என தேடி பிடித்து பிள்ளை பிடிப்பவர்கள் மாதிரி ஆட்களை பிடித்து கட்சியில் சேர்த்துக் கொண்டு நாங்கள் வளர்ந்து விட்டோம் என மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அனைத்தும் போலி, தமிழ்நாட்டைப் பற்றி பிஜேபிகாரர்களுக்கு தெரியவில்லை. வருகின்ற தேர்தலில் அதை புரிந்து கொள்வார்கள். பிஜேபி போன்ற கட்சிகளை தமிழ்நாடு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், என பேசினார்.

இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் :- மத்தியில் ஆளும் பிஜேபி அரசு கேஸ், விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதேபோல் ரயில் கட்டணமும் அதிக அளவில் உள்ளது. 500 ரூபாய் இருந்தால் மதுரையில் இருந்து சென்னைக்கு ரயிலில் சென்று விடலாம். ஆனால் தற்பொழுது கட்டண கொள்ளை காரணமாக மதுரையில் இருந்து சென்னை செல்ல மூவாயிரம் ஆகிறது. அதேபோல், பழைய ரயில் பெட்டிகளுக்கு பெயிண்ட் அடித்து புதிதாக பெயர் வைத்து புதிய ரயில் எனக் கூறி புதிய கொள்ளையை மோடி அரசு செய்து வருகிறது, என பேசினார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!