ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்ட 53 வயது நடிகை.. கேட்ச் செய்த மீனா…!

Author: Vignesh
5 March 2024, 12:57 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர். முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது.

rajini

பொதுவாக சூப்பர்ஸ்டார் என்று கூறினாலே இளம் நடிகைகள் முதல் மூத்த நடிகைகள் அவருடன் எப்படியாவது ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருந்து வரும். அப்படிதான், ஸ்ரீதேவி முதல் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரை பலரும் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளனர்.

suganya - updatenews360

ஒரு சில முன்னணி நடிகர்களால் மட்டுமே வாய்ப்பு கிடைத்தும் சில காரணங்களால் ரஜினியுடன் நடிக்க முடியாமல் போய்விட்டது. அப்படித்தான் நடிகை சுகன்யாவுக்கு கடந்த 30 ஆண்டுகளாக ரஜினிகாந்த் படம் கிடைத்தும் நடிக்க முடியாமல் போய் உள்ளது. முத்து படத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சுகன்யாவை நடிக்க வைக்க கேட்டு ஆள் அனுப்பியும், அந்த தகவல் அவரை சென்று சேரவில்லையாம். அப்படத்தில், மீனாவின் ரோலில் நடிக்க வாய்ப்பு வந்ததும் அவரால் நடிக்க முடியாமல் போனதாக சுகன்யா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!