நகை அடகு கடையில் 225 பவுன் அபேஸ்… ராஜஸ்தான் தப்பியோடிய ஊழியர் ; கைது செய்து சிறையில் அடைப்பு..!!

Author: Babu Lakshmanan
5 March 2024, 2:57 pm

திருவள்ளூர் பொன்னேரி அருகே அடகு கடை உரிமையாளர் உடல்நிலை சரியில்லாததால் ஊழியரை அடகு கடையை பார்த்துக்கொள்ளக் கூறிய நிலையில், பொதுமக்களின் 225 சவரன் தங்க நகைகளுடன் தலைமறைவான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருஆயர்பாடியில் வசித்து வருபவர் ராஜஸ்தான் மாநிலம் சாண்டியா பகுதியைச் சேர்ந்த கன்னியாலால். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வேண்பாக்கம் பகுதியில் அடகு கடை நடத்தி வந்த நிலையில், கடையைப் பார்த்துக் கொள்ள ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த உறவினரான சுரேஷ் வியாஸ் என்பவரை அழைத்து வந்து அடகு கடை நடத்தி வந்துள்ளார்.

கடந்த மூன்று வருடமாக உடல்நிலை சரியில்லாமல் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கன்னியாலால். அடகு கடைக்கு வராமல் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், நிலையில் பொதுமக்களிடமிருந்து அடகு பெறப்பட்ட நகைகள் சுமார் 225 சவரன் தங்க நகைகள் அனைத்தும் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சடைந்த அவர், இது குறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து தலைமறைவாகி தப்பி ஓடிய ஊழியர் சுரேஷ் வியாசை பொன்னேரி காவல் துறையினர் ராஜஸ்தானுக்கு சென்று கைது செய்து அழைத்து வந்தனர்.

பின்னர், விசாரணைக்குப் பிறகு, பின்னர் பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

பாதிக்கப்பட்ட அடகு கடைக்கடை உரிமையாளர் காவல் துறையினர் அவரிடமிருந்து தனது நகையை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்களுடைய வாடிக்கையாளர்கள் அடகு நகையை திரும்ப தருமாறு கேட்டு வருவதாகவும், அடகு நகையை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார் ..

  • DSP Removed From Good Bad Ugly Movie கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!
  • Views: - 270

    0

    0