சமஸ்கிருதம் பேசினால் ஆதரவு.. தமிழ் பேசினால் எதிர்ப்பு : மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் : செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan5 March 2024, 9:27 pm
சமஸ்கிருதம் பேசினால் ஆதரவு.. தமிழ் பேசினால் எதிர்ப்பு : மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் : செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு!
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை விருதுநகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான செயல்வீரர்கள கூட்டம் நடைபெற்றது
இதில் காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறுகையில்;- உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 15ம் தேதி அரசியல் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியது. தேர்தல் பத்திரம் எலக்ட்ரோ பாண்டு வங்கிய பாஜக உள்ளிட்ட கட்சிகள் திருப்பி கொடுக்க வேண்டும் இது தேர்தல் சாசனத்திற்கு எதிரானது.
வரும் மார்ச் 6ம் தேதிக்குள் பொது வெளியில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறியுள்ளது. சிபிஐ அமலாக்கத் துறையினர் மற்றும் வருமான வரித்துறையை தன்வசம் வைத்திருக்கிற பாஜக அரசு எஸ்பிஐ வங்கிகளை அரசியலுக்கு பயன்படுத்தும் மோடி அவர்கள் இந்த விபரங்களை கொடுப்பதற்கு நான்கு மாதம் அவகாசம் கேட்கிறார்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை மோடி பயன்படுத்துகிறார்.தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தன்னிச்சையாக செயல்படாமல் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பாட்டை கண்டித்து நாளை 3 மணிக்கு மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாளை மறுநாள் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்டேட் வங்கி முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். யாரெல்லாம் சமஸ்கிருதத்தை பேசுகிறார்களோ அவர்களுக்கு புகழ் பாடுகிறார்கள்.
தமிழை ஆதரிப்பவர்களை மோடி அரசு எதிர்க்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஓட்டு வங்கிக்காக வேஷம் போடுகிறார். தமிழ்நாட்டில் கூட்டணி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது நாங்கள் கேட்கும் தொகுதிகளை திமுக கொடுப்பார்கள்.
திமுகவுடன் சிறிய கட்சிகளே கூட்டணி முடிய வில்லை, நாங்கள் பேரியக்கம். கூடிய விரைவில் கூட்டணி முடியும். வரும் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் ராகுல் காந்தி போட்டியிட வேண்டுமென முன்மொழிகிறார்கள் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என நானும் வழிமொழிகிறேன்.
இந்திய கூட்டணி வலிமையாக உள்ளது. குஜராத்தில் இந்திய அரசு நிதியில் எய்ம்ஸ் கட்டப்பட்டது. மதுரையில் ஜப்பான் ஜெயிக்கா நிதியில் கட்டப்பட உள்ளது. இதிலிருந்தே தெரிய வேண்டாமா ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஒரு கண்ணில் வெண்ணெய்
தமிழ்நாட்டில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மோடி வரவில்லை ஓட்டு வாங்க மட்டும் வருகிறார். இதற்கு சரியான தக்க பதிலடி மக்கள் கொடுப்பார்கள் என்றார்.
0
0