தனி விமானம், சொகுசு அறை.. ரஜினி குடும்பத்திற்காக பணத்தை தண்ணீர் போல வாரி இறைத்த அம்பானி..!

Author: Vignesh
6 March 2024, 11:28 am

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் ஆனந்த் அம்பானிக்கு வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்தியாவின் பணக்கார பில்லியனர்களில் ஒருவரான வீரன் ஏ. மெர்ச்சந்த் என்ற வைர வியாபாரின் மகள் ராதிகா மெர்ச்சந்த்தை சில ஆண்டுகள் காதலித்து அண்மையில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர்.

ராதிகா மெர்ச்சந்த் பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை இந்த Pre Wedding கொண்டாட்டம் குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வீட்டில் நடைபெற்றது. இத்திருமணத்தில், உலக புகழ் பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

aishwarya - updatenews360

முன்னதாக, ஆயிரம் கோடிக்கும் மேல் செலவழித்து நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் மற்றும் பணக்கார்கள் பலரும் வந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் கலந்துகொண்டார். அங்கு எடுத்து புகைப்படங்களை ரஜினி மகள் ஐஸ்வர்யா வெளியிட்டு இருக்கிறார்.

aishwarya - updatenews360
aishwarya - updatenews360
aishwarya - updatenews360
aishwarya - updatenews360
aishwarya - updatenews360
aishwarya - updatenews360
  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 218

    0

    0