உங்க அப்பா வந்தாலும் பாஜகவின் வெற்றியை தடுக்க முடியாது… முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய பாஜக!!

Author: Babu Lakshmanan
6 March 2024, 11:44 am

மெரினாவில் தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள் தந்தையே வந்தாலும் பாஜகவின் வெற்றியை தடுக்க முடியாது என்று பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க, பிரத்யேக வியூகம் மற்றும் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க பாஜக பிரம்மாண்ட திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜக தலைவர் ஜெபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பல பாஜக மத்திய அமைச்சர்களும் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளுடன் மக்கள் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து தொடர்ந்து மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வருவதுடன், பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்கிறார். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற பிரதமரின் கல்பாக்கம் அணுமின் நிலைய வருகை மற்றும் ஒய்.எம்.சி.ஏ பாஜக பிரச்சார பொதுக்கூட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

இதற்காக பிரதமர் வரும் வழிநெடுக மக்களும், பாஜக தொண்டர்களும் திரண்டு உற்சாக வரவேற்பும் அளித்தனர். பிற முக்கிய ஏற்பாடுகள் அனைத்தையும் அக்கட்சியின் தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மேற்கொண்டு இருந்தார். தொடர்ந்து கட்சிப்பணிக்காக அவர் அயராது உழைத்து வருகிறார்.

சமீபத்தில் அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது :- “உங்களின் (முக ஸ்டாலின்) தகப்பனார் (கருணாநிதி) வந்தால் கூட பாஜகவின் வெற்றியை தடுக்க முடியாது. எங்களின் பாரத பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறை வெற்றி அடைவதை, மெரினாவில் உறங்கிக்கொண்டிருக்கும் உங்களின் தகப்பனார் வந்தாலும் தடுக்க இயலாது.

கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியது முதல், விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பியது வரை பலகோடி சாதனைகளை படைத்துள்ள பிரதமர் மோடியின் தலைமையில் மீண்டும் மத்தியில் ஆட்சி அமையும். நமது பிரதமர் சொத்துமதிப்பை விட, தமிழ்நாட்டில் உள்ள திமுக கவுன்சிலர்கள் சொத்து மதிப்பு என்பது அதிகம் ஆகும்.

என் மண் என் மக்கள் யாத்திரையில், மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுத்து இருக்கிறார். தமிழ்நாட்டை பிடித்திருக்கும் அரக்கன் திமுகவை ஆட்சியில் இருந்து வீட்டிற்கு விரட்டியடிப்பதே அந்த சபதம் ஆகும்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 282

    0

    0