பாஜக பிரமுகர் சவுதாமணி திடீர் கைது… அதிகாலையிலேயே வீடு தேடிச் சென்ற போலீசார்.. சென்னையில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan6 March 2024, 7:31 pm
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக பெண் பிரமுகர் சவுதாமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். அவரது குற்றச்சாட்டுக்களையும், திமுகவின் செயல்பாடுகளையும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து, சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அப்படி, கருத்து பதிவிடுபவர்களை குறிவைத்து போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், பாஜக ஊடகப் பிரிவின் செயலாளருமான சவுதாமணி சைபர் கிரைம் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். குழந்தைகள் கடத்தல் குறித்து அவதூறு பரப்பியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சௌதாமணியை கைது செய்து, பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.