ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு அரைகுறை… அதனால்தான் இப்படி பேசுகிறார் ; அமைச்சர் மனோ தங்கராஜ் விளாசல்!!

Author: Babu Lakshmanan
6 March 2024, 7:45 pm

பா.ஜ.க வின் வங்கி கணக்கை உடனடியாக முடக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் ஒரு கோடியை 59 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்க வருகை தந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பணிகளை தொடங்கி வைத்த பின்பு, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “தேர்தல் பத்திரம் தொடர்பாக பாஜகவிற்கு வழங்கப்பட்ட வங்கிக் கணக்குகளை வெளியிட வங்கிகள் தயங்குகின்றன. பாஜக வங்கிகளை மிரட்டி வைத்துள்ளது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பாஜக செயல்படுகின்றன என உச்ச நீதிமன்றமே தெரிவித்திருந்தது. இதனால், பாஜகவின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதேபோன்று இந்தியாவில் போதை பொருட்கள் கடத்தப்படுவதற்கு துறைமுகங்களை தனியாருக்கு மத்திய அரசு தாரைவார்க்க பார்ப்பதால், இது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நடைப்பெறும் என்று தெரிகிறது. அதனால், போதைப் பொருட்கள், துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட வழி வகுக்கின்றன. ஆனால், தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முதல்வர் கட்டுப்படுத்தி வைத்துள்ளார், எனக் கூறினார்.

மேலும், அய்யா வைகுண்டரை அவமானப்படுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதை விட வேறு வழி இருக்காது, ஆளுநர் ஆர்என் ரவி ஒரு அரைகுறை, நிறைகுடம் தழும்பாது, அரைகுடம் தழும்பும் அதுதான் ஆளுநர். ஆர்.என் ரவி. இவர் பேச்சை மக்கள் பொருட்படுத்த கூடாது, அய்யாவின் தர்மம் தான், திராவிட. மாடல் பேசுகிற தர்மம், எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 221

    0

    0