அந்த விஷயத்திற்கு தனுஷ் இப்படி பண்ணுவார்னு நினைக்கல.. வெளிப்படையாக பேசிய 53 வயது நடிகை..!

Author: Vignesh
7 March 2024, 12:23 pm

ISO முத்திரை பதித்த அழகான அம்மா நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். தென்னகத்து மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கிலும் எல்லோருக்கும் அம்மாவாக நடித்து வருகிறார். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்து ஆரம்பத்தில் 1980களில் ஹீரோயினாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பின்னர் திருமணத்திற்கு பின்ன சில ஆண்டுகள் சினிமாவிற்கு கேப் விட்டிருந்த அவர் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் ஹீரோக்களின் அம்மா வேடத்தில், நடித்து பெரும் புகழ் பெற்றார். அப்படி அவர் அம்மாவாக நடித்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படங்கள் ராம், தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், களவாணி, வேலையில்லா பட்டதாரி, கிரீடம், தெனாவட்டு உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது.

இதனால் சரண்யா பொன்வண்ணன் சிறந்த அம்மா நடிகையாக பல விருதுகளை வாங்கியுள்ளார். மேலும் அவர் சினிமாவை தாண்டி தனக்கு பிடித்த டைலர் தொழில் செய்து வருகிறார். இவர் 1989ம் ஆண்டு நடிகரும் திரைப்பட இயக்குனருமான ராஜசேகர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர் குடி பழக்கத்திற்கு அடிமையானதால் சரண்யாவுக்கு அவருடன் கருத்து வேறுபாடுஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

அதன் பின்னர் பெற்றோர் பார்த்து வைத்த பொன்வண்ணனை திருமணம் செய்துக்கொண்டார். கருத்தம்மா படத்தில் நடித்த போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த பொன்வண்ணனை சரண்யாவுடம் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்ததே பாரதி ராஜா தானாம். சரண்யாவின் பெற்றோரிடம் பேசி முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். பொன்வண்ணனை திருமணம் செய்த பிறகு வாழ்க்கையின் மகிழ்மையை உணர்ந்து வாழ்ந்து வரும் சரண்யாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் இருவருமே மருத்துவர்கள்.

Saranya Ponvannan - updatenews360

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சரண்யா பொன்வண்ணன் விஐபி படத்தில் நடித்தது குறித்து பேசி உள்ளார். அதில், அவர் நான் வேலையில்லா பட்டதாரி படத்தில் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று தனுஷ் இடம் கூறினேன், என்றால் அந்த படத்தில் எனக்கு நடிப்பதற்கு பெரிய அளவிலான காட்சிகள் இல்லை என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. அதனால், படத்தில் நடிக்க மாட்டேன் என்று தனுசிடம் சொன்னேன். ஆனால், அதற்கு அவர் என்னை கன்வின்ஸ் செய்து கொண்டே இருந்தார். இந்த அளவுக்கு அவர் பண்ணுவார் என்று நான் நினைக்கவே இல்லை.

saranya ponvannan

நானும் ஒரு கட்டத்தில் ஓகே சொல்லிவிட்டேன். வேலையில்லா பட்டதாரி படத்தில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாமல் தான் நடித்துக் கொடுத்தேன். ஆனால், நான் டப்பிங் பண்ணும் போது தான் நான் நடித்த காட்சிகளை பார்த்து அசந்து விட்டேன். படம் வெளியாகி என்னுடைய கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது என்று சரண்யா நிகழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 231

    0

    0