மேக்கப் ரூமில் நடிகையுடன் கமல்.. அந்த பொண்ணு கூட வேண்டாம்னு சொல்லுங்க.. கெஞ்சிய மனைவி..!
Author: Vignesh7 March 2024, 3:39 pm
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார். அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். தெரிந்தே இத்தனை நடிகைகளுடன் பழகி பிரிந்துவிட்ட கமல் ரகசியமாக பல நடிகைகளுடன் உறவு வைத்திருந்ததாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் சிம்ரன், நடிகை பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் கமல் ஹாசன் குறித்த ரகசியத்தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, வாணியுடன் உறவில் இருக்கும்போது நடிகை சரிகாவை கமலஹாசன் காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த வாணி இயக்குனர் சந்தான பாரதியை அழைத்து உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள் இதெல்லாம் தவறு என்று கெஞ்சியும் உள்ளார். இதை சொல்வதற்காக சந்தான பாரதி கமலின் கேரவேனுக்கு செல்ல அங்கே சரிகா உடன் கமல் இருந்துள்ளார். உடனே இது வேலைக்காகாது என்று வாணியிடம் அவர் கூறி விட்டாராம்.