மணப்பெண்ணுக்கு கிறிஸ்துவ பெயர்… இந்து கோவிலில் திருமணத்திற்கு அனுமதி மறுப்பு… திருமண ஆசையுடன் வந்த தம்பதிக்கு ஷாக்..!

Author: Babu Lakshmanan
7 March 2024, 4:25 pm

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் மணப்பெண்னின் பெயர் அந்தோணி திவ்யா என்று இருந்ததால், திருமணத்தை ஆலயத்தில் வைத்து திருமணம் நடத்த அதிகாரிகள் மற்றும் பூசாரிகள் மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகேயுள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணுச்சாமி. இவரது மகன் கண்ணன் என்பவருக்கும், தருவைகுளம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் அந்தோணி திவ்யா என்பவருக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மணமக்களின் பெற்றோர்கள் தூத்துக்குடி பாகம் பிரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை 11 மணியளவில் திருமணம் செய்வதற்காக மணமக்கள் கோவிலுக்குள் சென்றனர். அப்போது, திருக்கோவில் அதிகாரிகள் மற்றும் பூசாரிகள் அந்தோணி திவ்யா என மணமகள் பெயர் உள்ளதால் கோவிலுக்குள் திருமணம் நடத்த அனுமதி இல்லை, என கூறினர்.

இதைத்தொடர்ந்து, பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயம் முன்பு உறவினர்கள் முன்னிலையில் மணமகன் கண்ணன் மற்றும் மணமகள் அந்தோணி திவ்யாக்கு திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து, மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். இது தொடர்ந்து மணமக்கள் மற்றும் உறவினர்கள் ஆலயத்துக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மணமக்கள் உறவினர்கள் கூறும்போது, அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்தும் பெயரில் அந்தோணி என்ற கிறிஸ்தவ பெயர் மணமகள் பெயருக்கு முன்பாக இருந்ததால், தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனூரை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் வைத்து திருமணம் நடத்த அதிகாரிகள் மற்றும் பூசாரிகள் அனுமதி மறுத்துள்ள சம்பவம் கண்டனத்திற்குரியது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன், என தெரிவித்தனர்.

இதுகுறித்து சிவன் கோவில் நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோது, சிவன் கோவிலில் திருமணம் நடைபெற வேண்டுமென்றால், 10 தினங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவர்கள் கொடுத்த ஆவணத்தில் மணமகள் பெயரில் கிறிஸ்துவ மதம் குறிப்பிட்டுள்ளதால், தாங்களால் திருமணம் செய்து வைக்க முடியாது, என அவர்கள் தெரிவித்தனர்.

மணமகள் பெயருக்கு முன்பாக கிறிஸ்தவ பெயர் இருந்ததால் மணமகன் மற்றும் மணமகளை திருமணம் செய்ய ஆலயத்திற்குள் அனுமதிக்காத சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Ajith racing and movies நடிப்பிற்கு bye bye …அஜித் எடுத்த திடீர் முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
  • Views: - 348

    0

    0