அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்.. பின்னால் வந்த ஷாலி : என்னாச்சு? வெளியான வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2024, 8:21 pm

அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்.. பின்னால் வந்த ஷாலி : என்னாச்சு? வெளியான வீடியோ!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள நடிகர் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இரவது நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் துணிவு.

தற்போது இவர் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இணையத்தில் இவர் நடித்து வரும படப்பிடிப்பு தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் அஜித், ஷாலினி தம்பதியின் மகனின் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிகளை இருவரும் நேரில் கண்டு ரசித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.

இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அஜித் மற்றும் ஷாலினி செல்வது போல ஒரு வீடியோ வெளியாகி இருந்தது.

இதையடுத்து ஷாக்கான ரசிகர்கள், அவர் எதற்கு மருத்துவமனைக்கு சென்றார், அஜித்து என்ன ஆனது என பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் இது குறித்து வந்த தகவல் தற்போது பரபரப்பை அமுக்கியுள்ளது.

அதவாது அஜித் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?