புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் திருப்பம்.. 13 போலீசாருக்கு வைத்த செக் : நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2024, 8:59 pm

புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் திருப்பம்.. 13 போலீசாருக்கு வைத்த செக் : நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடித்து போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர். மேலும், நீதிபதி இளவரசன் சிறை வளாகத்திற்கு சென்று கைது செய்யப்பட்டவர்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்

இந்த நிலையில், சிறுமி படுகொலை வழக்கு கைதாகியுள்ள இரண்டு பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மத்திய சிறை வளாகத்திற்கு சென்ற நீதிபதி இளவரசன், இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில், சிறுமி படுகொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில், விசாரணை அதிகாரி உள்பட 13 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் தனசெல்வம், உதவி காவல் ஆய்வாளர் ஜெயகுருநாதன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 232

    0

    0