அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு.. ஆஜராகாத அமலாக்கத்துறை தரப்பு : கடுப்பான நீதிமன்றம் போட்ட உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2024, 12:19 pm

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு.. ஆஜராகாத அமலாக்கத்துறை தரப்பு : கடுப்பான நீதிமன்றம் போட்ட உத்தரவு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கு ஆதாரம் இருக்கிறது என அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. திமுக ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்த வழக்கு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து, 2020-ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்காக அமலாக்கத்துறை பதிவு செய்தது. மேலும், இந்த சொத்துகுவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் 2006ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கு ஆதாரம் இருக்கிறது என்றும் அமைச்சர் மீதான வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரிக்கவில்லை என வும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, தங்களையும் ஒரு தரப்பாக அமைச்சர் மீதான வழக்கில் இணைக்குமாறு தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது

அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணை நடைபெற இருந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்து வரும் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் விடுப்பில் சென்றதை தொடர்ந்து பொறுப்பு நீதிபதி சுவாமிநாதன் வரும் மார்ச்.22ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும் அமலாக்கத்துறை சார்பிலும் யாரும் இன்று ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 256

    0

    0