பேசுறதுக்கு முன்னாடி ஒருமுறை கண்ணாடியை பாருங்க.. உங்களுக்கு எந்த அருகதையும் இல்ல ; கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி
Author: Babu Lakshmanan8 March 2024, 2:44 pm
அப்பா கட்டி கொடுத்த வீட்டில் ஓசியில் வாழும் கனிமொழி அவர்களுக்கு பிரதமர் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது :- தினமும் மகிளிர்க்கு முக்கியமான நாட்கள் தான் மேற்கத்திய கலாச்சாரம் மூலம் மகளிர் தினம் கொண்டு வரப்பட்டது. இந்த நாள் அனைத்து மகளிர்க்கும் நல்ல நாட்களாக அமைய மகளிர் தின நல்வாழ்த்துக்கள், என்னை பொறுத்தவரையில் பெண்களுக்கு எல்லா நாட்களுமே முக்கியமான மகளிர் தின நாட்கள் தான், எனக் கூறினார்.
வாடகை வீடு எடுத்து பிரதமர் தமிழ்நாட்டில் தங்கினாலும் தமிழக மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள், என கனிமொழி கூறியதாக கேட்ட கேள்விக்கு, “கனிமொழிக்கு அப்பா கட்டி வைத்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காடு மேடு சென்று வேலை பார்த்ததில்லை. அப்பா கட்டி கொடுத்த வீட்டில் ஓசியில் வாழும் கனிமொழி அவர்களுக்கு பிரதமர் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை.
அனைவரும் உழைத்து சம்பளம் வாங்குகிறார்கள். கனிமொழி என்ன உழைக்கிறார்கள். அப்பாவின் பெயரை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி என்ற பெயரை எடுத்து விட்டால் கனிமொழி யார்?
பிரதமர் சென்னை வந்து வாடகை வீடு எடுத்து தங்க வேண்டும் என பேசுவதற்கு முன் கனிமொழி கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க வேண்டும். எத்தனை முறை ஜெயிலுக்கு சென்று உள்ளார்கள். எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளது. எப்பொழுது, சீனாவின் கொடியை விளம்பரத்தில் போட்டார்களோ, அப்பொழுது அவர்கள் 200 ரூபாய் உடன் பிறப்பாக மாறிவிட்டார்கள். யாரைப் பற்றி எப்படி பேச வேண்டும் என்பதை சிந்தித்துப் பேச வேண்டும், பிரதமரை பற்றி பேசுவதற்கு ஒரு அரை சதவீதம் கூட தகுதி இல்லை, என கூறினார்.