அண்ணாமலை கேட்ட கேள்வி… செய்தியாளர்கள் கூப்பிட கூப்பிட பதில் அளிக்காமல் சென்ற திமுக எம்பி கனிமொழி..!!!
Author: Babu Lakshmanan8 March 2024, 8:30 pm
அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி பதிலளிக்காமல் சென்றார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்ல திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி வந்தார்.
அப்போது, பெண்கள் மகளிர் தின வாழ்த்துக்களை கூறி கனிமொழியுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர், அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்ற போது, “பேட்டி அளித்தால் பிளைட் பறந்து விடும்,” என கைகடிகாரத்தை காட்டினார்.
இருந்த போதும், அவரிடம் கருணாநிதி என்பது தான் கனிமொழியின் அடையாளம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளாரே என கேட்டதற்கு, பதில் கூறாமல் சென்ற கனிமொழி, ‘யார் சொன்னது’ என கேட்டார். அதற்கு அண்ணாமலை என செய்தியாளர்கள் கூறியதும் பதில் கூறாமல் சென்று விட்டார்.