நாளுக்கு நாள் ஷாக்… ரூ.50 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை ;  5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,760 உயர்வு!!

Author: Babu Lakshmanan
9 March 2024, 10:57 am

நாளுக்கு நாள் ஷாக்… ரூ.50 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை ;  5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,760 உயர்வு!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

மார்ச் மாத தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சென்னையில் நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் ரூ.360 உயர்ந்துள்ளது.

தற்போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.49,200க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.79.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய முன்தினம் முதல் முறையாக ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6 ஆயிரத்தையும், சவரனுக்கு ரூ.48,000-ஐயும் கடந்து விற்பனையாகியுள்ளது. 5 நாட்களில் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…