4 மாத குழந்தையுடன் சாலையோரம் படுத்து தூங்கிய பெண்… அதிகாலையில் கண்விழித்ததும் காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்..!!
Author: Babu Lakshmanan9 March 2024, 1:11 pm
தூத்துக்குடி அருகே சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் நான்கு மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் குழந்தைகளை கடத்தும் கும்பல் ஒன்று நுழைந்து குழந்தைகளை கடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவதால் பொதுமக்கள் மீதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே விஇ ரோட்டில் வேலூரை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட சந்தியா என்ற இளம்பெண், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது 4 மாத பெண் கைக்குழந்தையுடன் வந்து சாலையில் தங்கி யாசகம் வாங்கி பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சந்தியாவும், அவரது நான்கு மாத பெண் குழந்தையும் சாலை ஓரத்தில் படுத்து உறங்கி உள்ளனர். இன்று காலை சந்தியா எழுந்து பார்க்கும் போது, அவருடன் படுத்து இருந்த நாலு மாத கைக்குழந்தை காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.
சந்தியா நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும்போது, அதிகாலை 3 மணி அளவில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த மர்ம நபர் ஒருவர், நாலு மாத பெண் குழந்தையை கடத்திச் சென்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, சந்தியா அளித்த புகாரின் பேரில் மத்திய பாகம் காவல்துறையினர் மற்றும் தனிப்படை போலீசார் சந்தியாவிடம் விசாரணை நடத்தி, குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் நாலு மாத கைக்குழந்தையை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த மர்ம கடத்திச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.