கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு.. 3 கார்களில் வந்த அதிகாரிகள் : கோவையில் பரபர!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2024, 5:35 pm

கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு.. 3 கார்களில் வந்த அதிகாரிகள் : கோவையில் பரபர!!

கோவை ராமநாதபுரம் அடுத்த கிருஷ்ணசாமி நகரில் கார் ஷோரூம் உரிமையாளர் அனீஸ் என்பவரது வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு இன்று காலை 8 மணியளவில் 3 கார்களில் 15 க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்தனர்.

அவர்கள் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனை நடந்து வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அமலாக்கத் துறையினர் வீட்டில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவில் தான், வழக்குப் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்பது குறித்த தகவல் வெளியாகும்.

அமலாக்கத் துறையினர் சோதனையை முன்னிட்டு அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசின் அமலாக்கத் துறை கோவை மட்டுமல்லாது சில இடங்களில் இன்று சோதனை நடத்தி வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 190

    0

    0