பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திருப்பம் : முன்னாள் சிறப்பு டிஜிபி தலைமறைவு..!!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2024, 6:37 pm

பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு பெண் எஸ்.பி., ஒருவருக்கு காரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அப்பெண் எஸ்.பி., புகார் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அளித்த தீர்ப்பில், ‛‛ராஜேஷ் தாஸ் குற்றவாளி. அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து” உத்தரவிட்டார்.

அவரை சரணடைய உத்தரவிடப்பட்டது. ஆனால், சரணடைய அவகாசம் கோரி ராஜேஷ் தாஸ் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ராஜேஷ் தாஸ் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை கைது செய்ய போலீசார், அவரது வீட்டிற்கு சென்ற போது அவர் தலைமறைவானது தெரியவந்ததாக தெரிகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!