திமுக போதைப் பொருள் விற்பதை தெரிந்ததால் தான் கட்சியில் இருந்து விலகினேன் : பாஜகவின் கே.பி ராமலிங்கம் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2024, 6:58 pm

திமுக போதைப் பொருளை விற்பதை தெரிந்ததால் தான் கட்சியில் இருந்து விலகினேன் : பாஜகவின் கே.பி ராமலிங்கம் பகீர்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே, பாஜக சார்பில், வளர்ச்சியடைந்த பாரதம், மோடியின் உத்திரவாத என்ற தலைப்பில் மோடி அரசின் பொதுமக்களின் கருத்து கேட்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் KP.இராமலிங்கம் முதல் மனுவை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், மாநில உரிமைகளை பற்றி பேசும் கட்சிக்கு எதற்கு அயலக அணி?

போதை மருந்து கடத்தவே அயலக அணி உருவாக்கினர். மத்திய அரசு ஊழல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால், மாநில அரசால் திருட முடியவில்லை. அதனால், அயலக அணியை உருவாக்கி அதிலிருந்து பணம் சம்பாதித்து தேர்தலில் ஈடுபடுகிறது என குற்றம்சாட்டினார்.

போதை மருந்து விற்க திமுக., கட்சி இறங்கியது அரசல்புரசலாக தெரிய வந்ததால் கட்சியை விட்டு வெளியே வந்தேன் என்றார்.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?