ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. திமுக அரசை களங்கப்படுத்த பாஜக முயற்சி : அமைச்சர் ரகுபதி!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2024, 2:26 pm

ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. திமுக அரசை களங்கப்படுத்த பாஜக முயற்சி : அமைச்சர் ரகுபதி விளக்கம்!

தி.மு.க. மூத்த தலைவரும் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவை பா.ஜ.க. அரசு பயன்படுத்துகிறது. இந்தியாவில் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் தான் காரணம்.

போதைப்பொருள் விவகாரத்தில் தி.மு.க.வை களங்கப்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. அதற்கு அ.தி.மு.க. துணைபோகிறது. தி.மு.க.வின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை நீதிமன்றமே பாராட்டியுள்ளது.
தி.மு.க.வினர் தவறு செய்வது தெரியவந்தால் உடனடியாக கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்கிறது. தி.மு.க. என்றும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடாது. சட்டவிரோத நடவடிக்கையில் துணை போவோரை கட்சியில் வைத்திருக்கமாட்டோம்.

போதைப்பொருள் தொடர்பான புகார் எழுந்தவுடன் ஜாபர் சாதிக்கை தி.மு.க.வில் இருந்து நீக்கிவிட்டோம். ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசை களங்கப்படுத்தும் நோக்கோடு போதைப்பொருள் தடுப்பு பிரிவை பா.ஜ.க. களமிறங்கியுள்ளது. பா.ஜ.க.வின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்றார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 189

    0

    0